உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

பிக்கப் – பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: அக்கரைப்பற்றைச் சேர்ந்த 13 வயது சிறுமி பலி.!!!

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் வாகனம் பயணிகள் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து இன்று (13) அதிகாலை வேளையில் குருநாகல் மற்றும் மெல்சிறிபுர பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள “கொக்கரல்ல” எனும் ஊரில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பிக்கப் வாகனம் எதிரே வந்த பயணிகள் பேருந்துடன் மோதியதில் பிக்கப்பில் பயணித்த சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் அக்கரைப்பற்று 13, பழைய சீனிமா வீதியில் வசித்து வந்த நுமைஸ் பதின் செய்னப் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறுமியின் சடலம் தற்போது குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் மாமா ஆகியோர் காயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 930374

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time