உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்; செப்டெம்பர் 29 வரை நீடிப்பு.!!!

கிழக்கு மாகாணத்தில் ஐந்து பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவு இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படும் இருவர் உள்ளிட்ட மூவருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215308

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time