உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

5 வருடங்களாக திறந்த பிடியாணையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்; பொலிஸாரினால் கைது.!!!

(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்)

5 வருடங்களாக அக்கரைப்பற்று பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் நேற்று (14) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாரினால் 2020 ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் திறந்த பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்துள்ளார்.

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்ப ட்டுள்ள சந்தேக நபர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் ஐ.எல்.எம்.இஸ்மாயில், பொலிஸ் உத்தியோகத்தர் எ.ம்.நிரஞ்சன் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (14) வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்றை சேர்ந்த 46 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879677

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time