உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக பொலிஸ் அதிரடி – ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது.!!!

-பாறுக் ஷிஹான்-

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த தகவலுக்கமைய சனிக்கிழமை (23) மாலை  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக தலைமையிலான  பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சாய்ந்தமருது-14 பிரிவில் வதியும் சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்  2220 மில்லி கிராம் உட்பட  போதைப் பொருளை விற்று பெறப்பட்ட   ஒரு தொகுதி பணத்துடன் கைதானார்.இதே வேளை மற்றுமொரு சந்தேக நபர் மாவடி பகுதியில் வைத்து கைதானார்.அச்சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 2300 மில்லி கிராம் உட்பட  ஐஸ்  போதைப் பொருள் 60 மில்லிகிராம்  பக்கேற் 2 உம் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் மீட்கப்ட்டது.அத்துடன்   இச்சந்தேக நபர்களிடம்   இருந்து ஒரு தொகுதி பணமும்  மீட்கப்பட்டது.மேற்குறித்த பணம்  போதைப்பொருள் விற்பனையில்  சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையில்  குறிப்பிட்டனர்.

மேலும்  இச்சோதனை நடவடிக்கையானது   கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார்   வழிகாட்டுதலின் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும்  இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கைகளை சாய்ந்தமருது  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871485

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time