கணவனின் கொடூர தாக்குதலில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கருவில் இருந்த குழந்தையும் பலி.!!!
புத்தளம் மாவட்டம், கற்பிட்டி – தலவில பகுதியில் கணவரின் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கான 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கருவில் இருந்த பிறக்காத குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவில, கெலே பள்ளிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு குழந்தைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவில எஸ்.பி.ஆர். பகுதியில் வைத்து குறித்த பெண் மீது கணவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட கற்பிட்டி பொலிஸார், சுமார் 45 நிமிடங்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
