உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

ஜனாதிபதியின் செயலாளர் – வியட்நாம் தூதுவருக்கு இடையில் சந்திப்பு.!!!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுறு (21) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் முதலீட்டு ஊக்குவிப்பிலும் இலங்கையுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

அத்தோடு நாடென்ற வகையில் வியட்நாம் அடைந்துள்ள வெற்றிகளை இலங்கையில் திறம்பட பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வியட்நாம் தூதரகத்தின் பிரதி செயற்பாட்டு பிரதானி லீ வேன் ஹோங் (Le Van Huong) மற்றும் தூதுவரின் செயலாளர் ரம்யா நிலங்கனி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722330

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time