உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பாடசாலையில் சேர்க்க ரூ.2.5 இலட்சம் இலஞ்சம்; அதிபர் கையும் களவுமாக கைது.!!!

ரூமஸ்ஸல – உனவட்டுன பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களை 2026ஆம் ஆண்டு தரம் 1 மற்றும் தரம் 8இல் சேர்ப்பதற்காக ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் அதிபர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, ஹபராதுவ – காலி பகுதியில் உள்ள பிரபல கடையொன்றில் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ.6 இலட்சம் கோரப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொகை ரூ.3 இலட்சமாக குறைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதில் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மேலும் பணம் கோரியதுடன், பணம் வழங்காவிட்டால் மாணவர்களை பாடசாலையிலிருந்து நீக்கிவிடுவதாக அதிபர் அச்சுறுத்தியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215587

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time