உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலஞ்சம் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்யலாம்; புதிய பிரிவு திறப்பு.!!!

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகத்தில் அரச ஊழியர்களின் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக உள்ளக விவகாரப் பிரிவு (Internal Affairs Unit – IAU) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இப்பிரிவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, குறித்த பிரிவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேருக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலகத்தின் உள்ளக விவகாரப் பிரிவின் தலைவராகப் பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் செயற்படுகின்றார்.

இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் ஈ.எம். ராபிக் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

அரச ஊழியர்கள் இலஞ்சம் அல்லது ஊழலில் ஈடுபடுவது தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள், அது குறித்து கிண்ணியா பிரதேச செயலகத்தின் உள்ளக விவகாரப் பிரிவில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1228030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time