ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு; நீண்ட தூர ரயில் சேவைகள் இடைநிறுத்தம்.!!!
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று(16) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று(17) நீண்ட தூர ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று காலை வேளையில் 23 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுதுடன், நேற்று அனைத்து இரவு நேர தபால் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.