உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

புகையிரத பயணிகள் கவனத்திற்கு; நேர அட்டவணையில் மாற்றம்.!!!

மட்டக்களப்பு – கொழும்பு, திருகோணமலை – கொழும்பு எதிர் வரும் 24 திங்கட்கிழமை முதல்  நேர அட்டவணையில் மாற்றம் கொண்டு வர புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து புறப்படும் இரவு நேர புகையிரதம் தினமும் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 04.16 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்த இரவு 11.00 மணிக்கு புறப்படும் புகையிரதமானது காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும் .

திருகோணமலயிலிருந்து புறப்படும் இரவு நேர தபால் புகையிரதம் 24 திங்கட்கிழமை முதல் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4 00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் என இலங்கை புகையிரத தினைக்களம் புதிய நேர அட்டவனையை வெளியிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இந்த புதிய நேர அட்டவனையானது புகையிரத பயணிகளுக்கு எந்தளவு நன்மை பயக்கும் என தெரியவில்லை.

ஏற்கனவே கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் புகையிரத நேர அட்டவனையையே பிரதானமாக மாற்றுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்..

ஏனெனில் அவசர வேவைக்காக கொழும்பு சென்று திரும்புவோர் காலையில் வந்து தங்கள் கடமைகளுக்காக அலுவலகம் செல்வதில் பாரிய சிக்கல் நிலை உள்ளது.

இப் புகையிரதம் காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பிற்கு வருவது சாத்தியமற்றது. அது குறைந்தது காலை 8.00,மணிக்கு மேலாகலாம் என பயணி ஒருவர் விசனம் தெரிவித்தார்.

மேலும் யானைகள் இரயிலில் மோதுவதை தவிர்க்க வண பாதுகாப்பு மற்றும் வணஜீவராசிகள் தினைக்ளங்களே குறித்த பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்வேண்டுமே தவிர புகையிரத தினைகளத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து பயணிகளை அசெளகரிய படுத்துவது என்பது கையில் காயம்பட்டுவிட்டது என மருத்துவமனைக்கு சென்றவரிடம் மருந்து தேவையில்லை முழங்கால்வரை கையை எடுத்துவிடலாம் என கூறுவதற்கு சமமானது என மற்றுமொரு பயணி கருத்து தெரிவித்தா்.

(Arunan meenachchisundaram)

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722242

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time