உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

‘சுரகிமு லங்கா’ போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பு.!!!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ஜனாதிபதி செயலகம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘சுரகிமு லங்கா’ (Surakimu Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த விடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேடுகளில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்திய முறைகளைப் பதிவு செய்து ஆவணமாக முன்வைத்த மாணவர்களைப் பாராட்டி, பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலையில் பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்வஹான் தலைமையில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இப்போட்டியில் முதலாமிடத்தை தரம் 8 ஐச் சேர்ந்த மாணவன் எம்.ஆர்.யூ. அப்துல்லாஹ், இரண்டாமிடத்தை தரம் 7 ஐச் சேர்ந்த மாணவி ரீ.எப். தஹானி, மூன்றாமிடத்தை தரம் 9 ஐச் சேர்ந்த எப்.எப். ஹரீரா ஆகியோர் பெற்றுக் கொண்டதுடன் இவர்களுக்கான பரிசில்கள் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சுற்றாடல் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போட்டியை அதிபர் அவர்களின் ஆலோசனைக்கமைய உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டதுடன் இப்போட்டிகளை விஞ்ஞானப் பாட ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து நடாத்தி இருந்ததுடன், இதற்கான பரிசில்களுக்கு உதவி அதிபர் பௌசான் அவர்கள் அனுசரணை வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806224

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time