உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

சவூதியில் தண்டனை பெற்ற இலங்கையருக்கு நிவாரணம் கோரி; இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம்.!!!

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான திரு. சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளது.

எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.

எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம்  என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.

அதேவேளை, குறித்த சம்பவத்தில் திரு. சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, திரு. சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய   நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

மேற்படிச்  சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகுமென மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010717

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time