உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மறைந்த ஊடகவியலாளர் ஏ. எல். எம். சலீம் நினைவாக நிந்தவூரில் வீதிக்கு பெயரிட கோரிக்கை.!!!

-நூருல் ஹுதா உமர்-

மறைந்த சிறந்த ஊடகவியலாளர் “கலாபூசணம்” ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவாக நிந்தவூரில் ஒரு வீதிக்கு அவரது பெயரை சூட்டுமாறு கோரி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

இம்மகஜர் மூலம், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கிய ஏ.எல்.எம். சலீம் அவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரின் பெயரை நிலைநிறுத்துவது அவசியம் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், அவரது ஊடகச் சேவைகள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய பணிகள் மற்றும் பொதுமக்கள் நலனில் ஆற்றிய அர்ப்பணிப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியம் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806175

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time