ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மனைவி கைது.!!!
கிரிந்திவெல – நாரங்கஸ்பிட்டிய பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மனைவியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில், கடத்தல், கொலை மற்றும் சடலத்தை காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து CID-யின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு நீண்டகாலமாக விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளது.
இதன்போது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 49 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (07) நண்பகல் நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் நாரங்கஸ்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், படுகொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் மனைவி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.