உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு ரூ.11,003.96 மில்லியன் ஒதுக்கீடு – முன்னேற்றம் குறித்து மீளாய்வுக் கூட்டம்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கூட்டம் நேற்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்துகொண்டார். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் கூட்டம் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் ஹபீப் லெப்பை மெஹமட் ரிபான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

ரூ.11,003.96 மில்லியன் ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்காக மொத்தம் 2,752 அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூ.11,003.96 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மாவட்ட செயலகத்தின் கீழ் 1,031 திட்டங்களுக்கு ரூ.2,723.72 மில்லியனும், ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் 1,079 திட்டங்களுக்கு ரூ.4,672.39 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாண சபையின் கீழ் 627 திட்டங்களுக்கு ரூ.2,706 மில்லியனும், வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் 15 திட்டங்களுக்கு ரூ.901.85 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குடிநீர் முதல் யானை–மனித மோதல் வரை

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

குடிநீர் விநியோகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி, மட்டக்களப்பு வாவி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், கனிய வள அகழ்வு, காகித நகர அபிவிருத்தி, பாலங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதுடன், மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் நிலவும் யானை–மனித மோதலின் தாக்கங்களைக் குறைப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தேவையான பிராந்திய நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214932

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time