2,000 முதலீட்டாளர்களிடம் 4 பில்லியன் ரூபா மோசடி; இரண்டு நிறுவனப் பணிப்பாளர்களுக்கும் விளக்கமறியல்.!!!
சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப் பங்கு வழங்குவதாகக் கூறி அவர்களிடமிருந்து பணம் திரட்டி, சுமார் 4 பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்களையும் எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவருக்கும் எதிராக இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மற்றும் கொஹுவல பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.