உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ரூ.800 மில்லியன் கொள்ளை; முக்கிய சூத்திரதாரி கைது.!!!

தலவத்துகொட பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றில் இடம்பெற்ற சுமார் 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி மற்றும் வாகன ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முல்லேரியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபாய், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில், ஆயுதமேந்திய மூவர் முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தி தாக்கியுள்ளனர்.

இதன்போது சுமார் 650 மில்லியன் ரூபாய் பணமும், 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான 30 பவுண் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் முன்னதாக குறித்த முகவர் நிலையத்தில் பிரதி பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகவர் நிலையத்தின் உரிமையாளரிடமிருந்து பெற்ற 15 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் கடும் கடன் சுமையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானம் மற்றும் கடன் சுமை காரணமாகவே கொள்ளையைத் திட்டமிட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தனியாக கொள்ளையை மேற்கொள்ள முடியாததால், நவகமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் சிவில் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். அவர் ஊடாக பொமிரிய பகுதியைச் சேர்ந்த மேலும் இருவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இந்தக் குழுவினர் பிலியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தித்து கொள்ளையைத் திட்டமிட்டுள்ளனர்.

குற்றச் செயலுக்காக ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளைக்குப் பின்னர் மீண்டும் சித்தமுல்ல வீட்டில் சந்தித்த குழுவினர் கொள்ளையிடப்பட்ட பணத்தைப் பகிர்ந்துள்ளனர். இதன்போது பிரதான சூத்திரதாரிக்கு 200 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் சிவில் ஊழியருக்கு 150 மில்லியன் ரூபாயும் மற்றும் தங்க நகைகளும் கிடைத்துள்ளன. ஏனைய இருவருக்கும் தலா 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சூத்திரதாரி தனக்குக் கிடைத்த பணத்தில் 5 மில்லியன் ரூபாயை பொமிரிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும், அடகு வைக்கப்பட்டிருந்த காணியொன்றை மீட்பதற்காக 1.3 மில்லியன் ரூபாயை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், முல்லேரியா பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தில் 300,000 ரூபாயைத் தவிர ஏனைய அனைத்துப் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215594

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time