உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பதவி நீக்கம் — நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை.!!!

(பாறுக் ஷிஹான்)

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் எதிர்வரும் திங்கட்கிழமை(5) நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பதவியேற்கவுள்ளார்.

கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட இவரது காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஏற்பட்டிருந்ததுடன் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருள்களை மோசடி செய்த குற்றச் சாட்டின் அடிப்படையில் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை 2026.1.2 ந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த குறித்த நீதிவான் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் செய்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிவானாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700798

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time