உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில்; இலங்கைக்கு 9 ஆவது இடம்.!!!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு வீரர்களுக்கான (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், பெண்கள் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

இதில் போட்டித் தூரத்தை முடிக்க இலங்கை வீராங்கனைகள் 2 நிமிடங்கள் 14.25 வினாடிகள் என்ற நேரத்தை பதிவு செய்தனர்.

இது இலங்கையின் புதிய இளையோர் சாதனையாகவும் பதிவாகியுள்ளது.

இதில் தங்கப் பதக்கத்தை 2 நிமிடங்கள் 11.11 வினாடிகளில் போட்டித் தூரத்தை முடித்த சீனா வென்றது.

2 நிமிடங்கள் 15.00 வினாடிகளில் போட்டித் தூரத்தை முடித்த தாய்லாந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

ஆசிய தடகள சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கதீஃப் நகரில் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்று (18) நிறைவடைந்தது.

இதில் இலங்கை ஒரு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இதன்படி, போட்டியில் பங்கேற்ற நாடுகளில், குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கமாவது வென்ற 19 நாடுகளில் இலங்கை பதக்கப் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை பெற்ற மிக உயர்ந்த பதக்க எண்ணிக்கையாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு இப்போட்டித் தொடர் நடைபெற்றபோது, இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 4 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.

19 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நிலையில், ஜப்பான் மூன்று தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

போட்டியை நடாத்திய சவூதி அரேபியா மூன்று தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700566

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time