சவூதி பல்கலைக்கழகங்களில்; பட்டப்படிப்புக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ள – விண்ணப்பம் கோரல்.!!!
மதீனா இஸ்லாமியா பல்கலைக்கழகம் உட்பட சவூதியின் 05 பல்கலைக்கழகங்களுக்கு பட்டப்படிப்புக்காக வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 வயதிற்குட்பட்ட உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தியடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு : அனைத்து Faculties ம் இங்கே இருப்பதால் நாட்டில் நீங்கள் Arts, Commerce, maths, Since, IT போன்ற எத்துறையில் உயர்தரம் எழுதி சித்தியடைந்திருந்தாலும் உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
ஆண்கள் மாத்திரம்
இதில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.
1. கற்று முடியும் வரை வருடத்தில் ஒரு தடவை விடுமுறைக்கு நாட்டிற்கு வந்து செல்ல இலவச விமான பயணச்சீட்டுகள்.
2. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு 2500 ரியால் பணம், இலவச உள்ளக விடுதி, கற்றல் தளர்பாடங்கள் போன்றன இலவசமாக வழங்கப்படும்.
3. மிகக் குறைந்த மானிய விலையில் தரமான மூணுளை உணவு வழங்கப்படும்
4. மாணவருக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்குவதற்காக வருடாந்தம் 850 ரியால்கள் வழங்கப்படும்.
5. மாணவரின் கைச் செலவுக்காக மாதந்தம் 840 ரியால்கள், தற்போதைய இலங்கை மதிப்பில் 66,360/= ரூபாய் வழங்கப்படும்.
6. பரீட்சை பெறுபேருகளில் சிறப்புச்சித்தி எய்தும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வருடாந்தம் 1000 ரியால்கள் வழங்கப்படும்.
7. பல்கலைக்கழகத்திலிருந்து மதீனா மஸ்ஜித் நபவி ஹரத்துக்கு சென்று வருவதற்கு தினமும் இலவச பேருந்து சேவை.
8. அனைத்து மாணவர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை ,சுகாதார சேவைகள் வழங்கப்படும்.
இது போன்ற இன்னும் ஏராளமான சலுகையுடன் முழு இலவச புலமைப்பரிசில்.

