மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை நகரிடை கடுகதி ரயில் சேவையில் நேர மாற்றம்.!!!
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படும் இலக்கம் 6076 கொண்ட நகரிடை கடுகதி ரயில் (Intercity Express) சேவையில், எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புதிய நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதானையில் அமைந்துள்ள மத்திய ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி, குறித்த ரயில் மட்டக்களப்பில் இருந்து முற்பகல் 11.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.44 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
முக்கிய ரயில் நிலையங்களுக்கான புதிய நேர விபரங்கள் வருமாறு:
ஏறாவூர் – மதியம் 12.06
தேவபுரம் – மதியம் 12.15
வாழைச்சேனை – மதியம் 12.30
புணாணை – மதியம் 12.58
வெலிக்கந்தை – பிற்பகல் 01.22
மணம்பிட்டிய – பிற்பகல் 01.57
பொலன்னறுவை – பிற்பகல் 02.11
கிங்குராக்கொட – பிற்பகல் 02.32
கலோயா சந்தி – பிற்பகல் 03.00
ஹபரணை – பிற்பகல் 03.24
கெக்கிராவ – பிற்பகல் 03.48
கலாவௌ – மாலை 04.00
அவுகன – மாலை 04.05
மொரகொல்லாகம – மாலை 04.24
மஹோ சந்தி – மாலை 05.10
குருணாகல் – மாலை 06.00
பொல்கஹவெல – மாலை 06.29
மருதானை – இரவு 07.40
கொழும்பு கோட்டை – இரவு 07.44
இந்த ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள், புதிய நேர மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே அமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.