லொறி மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு; ஆசிரியர் தினத்தில் சோகம்.!!!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (06) இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியர் மீது கனரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கனரக வாகனத்தின் சாரதி சம்பவம் இடம்பெற்ற பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


