பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
பெண் தலைமைத்துவக் குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரம் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை (07) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில், கிண்ணியா பிரதேச செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பயனாளிகளுக்கும் குறித்த சுயதொழில் உபகரணங்கள் கையளிக்கப்பட்டதுடன், பிரதேச செயலகத்தின் பல்வேறு உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுயதொழில் நடவடிக்கைகள் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும், அவர்களைத் தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்துவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
