உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை: மட்டக்களப்பில் பிரபல உணவகத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்.!!!

மட்டக்களப்பில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்றிற்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை ரூ.100க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வழக்கின் விசாரணையின் போது குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் குறித்த உணவகத்திற்கு ரூ.500,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் தகவல் வழங்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811127

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time