கல்முனை அஷ்ரஃப் நினைவு வைத்தியசாலை இரத்த வங்கியில் கடும் தட்டுப்பாடு – பொதுமக்களிடம் அவசர இரத்த தான கோரிக்கை.!!!
-நூருல் ஹுதா உமர்-
கல்முனை அஷ்ரஃப் நினைவு வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகையான இரத்தங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அவசர நிலையை முன்னிட்டு, இரத்த தானம் செய்யத் தகுதியுடைய பொதுமக்கள் அனைவரும் உடனடியாக இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து தங்களின் இரத்த தானத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக தினமும் அதிக அளவில் இரத்தம் தேவைப்படுவதால், தற்போதைய தட்டுப்பாடு பல நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
“உங்கள் ஒரு இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றும்” என்பதை நினைவில் கொண்டு, சமூகப் பொறுப்புடன் இந்த உன்னத பணியில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது மனிதநேயத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும் என்பதால், பொதுமக்கள் விரைவாகச் செயல்பட்டு உயிர்களை காக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
