உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சட்டத்தரணி சந்தேகத்தில் கைது – 3ம் திகதி வரை விளக்கமறியல்.!!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு அவரை கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சட்டத்தரணியை வெள்ளிக்கிழமை (30) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

பொலிஸ் தகவல்களின்படி, குறித்த சட்டத்தரணி தனது காரியாலயத்தில் 2023ம் ஆண்டு முதல் 24 வயதுடைய யுவதி ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, கடந்த இரண்டு வருடங்களாக காலை முதல் இரவு வரை பணியாற்றி வந்துள்ளதுடன், வாரத்திற்கு 3,000 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டத்தரணி குறித்த யுவதியிடம் தொடர்ச்சியாக பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது யுவதி அதனை மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம்

மேலும், கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், காரியாலயத்தில் தனிமையில் பணியாற்றிக் கொண்டிருந்த யுவதிக்கு மதிய உணவு பார்சல் வழங்கப்பட்டதாகவும், அதனை உட்கொண்ட சில நிமிடங்களில் அவர் மயக்க நிலையில் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மயக்க நிலையில் இருந்த யுவதியை அலுவலக அறை ஒன்றில் கொண்டு சென்று, அவரது சம்மதம் இன்றி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர் யுவதியின் சம்பளம் 4,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமணம் மற்றும் கர்ப்பம் வெளிச்சத்திற்கு

பின்னர், குறித்த யுவதிக்கு மற்றொரு நபருடன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 28ம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திருமணத்துக்கு பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவர் சுமார் 12 வார கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கணவன் அவரை விட்டுச் சென்ற நிலையில், தேசிய சிறுவர் மற்றும் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்ததையடுத்து, சம்பந்தப்பட்ட மகளீர் சேவை அதிகாரிகள் யுவதியை பாதுகாப்பான இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

பொலிஸ் நடவடிக்கை மற்றும் நீதிமன்ற உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபரான சட்டத்தரணியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், இரு தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலனை செய்த நீதவான், எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700873

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time