பாடசாலை மாணவி மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு; உப பொலிஸ் பரிசோதகருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறை.!!!
பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று, அவரைப் பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு தனித்தனியான குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் விதிக்கப்பட்ட 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை 15 ஆண்டுகளில் ஏககாலத்தில் அனுபவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.