உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில்; 15,000 மெற்றிக் தொன் உப்பு அறுவடை பாதிப்பு.!!!

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ்)

சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையினால் சுமார் 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு காரணமாக, உப்பு உற்பத்திக்கு தேவையான சூரிய ஒளி போதியளவு கிடைக்காததும், தொடர்ச்சியாக மழை பெய்வதும் இதற்குரிய முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் சுமார் 60 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருவதுடன், வெயில்ள காலங்களில் சுமார் 100,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான உப்பு அறுவடை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் மற்றும் அரச உப்பு உற்பத்தியாளர்களின் தொடர்புடைய துறைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புத்தளம் மாவட்டத்தில், சிறுபோக பருவத்தில் உப்பு அதிக அறுவடைக்கு வழிவகுத்துள்ள நிலையில், நேற்று நேற்று (17) முதல் இன்று வரை தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக, புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தாம் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதிக கடன் சுமைகளோடு தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாகவும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720162

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time