உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான தேர்தல் காரியாலயம் திறப்பு.!!!

(எம் எஸ் எம் ஸகீர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் கற்பிட்டி நகரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரதான காரியலமாகவும் புதுக்குடியிருப்பு வட்டார வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் காரியலமாகவும் செயற்படும் முகமாக தேர்தல் பிரச்சார காரியாலயம் வெள்ளிக்கிழமை (04) வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர் எஸ் எச் எம் நியாஸினால் திறந்து வைக்கப்பட்டது.

கற்பிட்டி பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.ஆர் எம் முஸம்மில் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான எம் எச் எம் ஹில்மி மற்றும் கற்பிட்டி நகரில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள எம் எச் எம் சியாஜ், எம்.ஏ பைசல், எம்.டி றிப்கான் ( றஹ்மானி) ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722204

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time