உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

வெளியில் சிற்றுண்டிக் கடை; உள்ளே இரகசிய நிலத்தடி இரவு விடுதி – கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்.!!!

கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில், சிற்றுண்டிக் கடை ஒன்றின் பின்னால் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தடி இரவு விடுதி ஒன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் உள்ளிட்ட ஒரு தொகை மதுபானங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிப்புறத்தில் குறித்த இடம் முறுக்கு உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடையாகவே காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது, சிற்றுண்டிப் பொதிகள் வைக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்றை அகற்றிய பின்னர், அங்கிருந்து நிலத்தடி பகுதிக்கு செல்லும் இரகசிய நுழைவாயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலத்தடி பகுதியில் இரகசியமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரவு விடுதி தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1183940

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time