உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அம்பாறையில் மீட்பு.!!!

-பாறுக் ஷிஹான்-

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் விரிவிற்குட்பட்ட  கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை (29) மாலை அப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  இவ்வாயுதங்கள்  மீட்கப்பட்டுள்ளன.

வழமை போன்று ரோந்து சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததனால் துருப்பிடித்திருப்பதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இதில் ஸ்னைப்பர் துப்பாக்கி – 01 ஒரு தொலைநோக்கி – 01 ரவைக்கூடு – 01 தோட்டாக்கள் – 07 உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குவதுடன் தற்போது தமன பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட பகுதியில் கடந்த யுத்த காலங்களில் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களாக அறிவித்து செயற்பட்டு வந்ததுடன் கெரில்லா போர் உத்தியை இவ்வாறான ஆயுதங்கள் ஊடாக  வெளிப்படுத்தி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 938349

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time