உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மட்டக்களப்பு இருதயபுரம் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு: 40 மில்லியன் நிதியில் 1000 மீட்டர் வடிகால் அமைப்பு திட்டம் ஆரம்பம்.!!!

-எம்.ரி.எம்.யூனுஸ்-

நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு நகரில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பிரதேசமாகக் காணப்படும் இருதயபுரம் பகுதியில் நீண்டகாலமாக நிலவிவந்த வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் முயற்சியின் பயனாக, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணரெத்தின அவர்களின் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 1000 மீட்டர் நீளமான புதிய வடிகால் அமைப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இருதயபுரம் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நீர்தேக்கம் பிரச்சினைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது.

இத்திட்டத்தை முன்னெடுக்க மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேவையான போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், வேலைகள் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், இருதயபுரம் பகுதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700919

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time