உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் – திடீர் சுகாதார பரிசோதனை.!!!

(பாறுக் ஷிஹான்)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் நேற்று (27) விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன.

பரிசோதனையின் போது உணவுப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள், சுற்றுப்புற தூய்மை மற்றும் நுளம்பு வளர்ச்சி ஏற்படக்கூடிய சூழல்கள் உள்ளிட்ட அம்சங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871178

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time