உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க விசேட திட்டங்கள் – கந்தசாமி பிரபு.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (14) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எச். கே. டி. பி. ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மாவட்டத்தில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதம பொறியியலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1232227

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time