நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை; 536 பேர் கைது.!!!
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையில் 27,100 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 536 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 222 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 117 பேர் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 117 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.