உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில்: இலங்கை அணிக்கு பின்னடைவு.!!!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் சர்வதேச அணிகளுக்கான தரவரிசையில், இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தை பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2–1 என்ற கணக்கில் இழந்ததன் காரணமாக, இதுவரை 5ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி, தரவரிசையில் ஒரு படி கீழிறங்கியுள்ளது.

இதற்கிடையில், இங்கிலாந்து அணி தொடர்ந்தும் 8ஆவது இடத்திலேயே நிலைத்திருக்கிறது. 7ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி தரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இங்கிலாந்து பெற்ற இந்த ஒருநாள் தொடர் வெற்றியானது, 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்த அணி தனது சொந்த மண்ணுக்கு வெளியே பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாக பதிவாகியுள்ளது.

இந்த புதிய தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன. அதேவேளை, பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700868

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time