உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இலங்கை குடியரசு தினம்; 53 ஆண்டுகள் நிறைவு.!!!

இலங்கை இன்று வியாழக்கிழமை (22) தனது 53 வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. 1972 மே 22 இல், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்பு இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலமாக, இலங்கை முழு சுதந்திரம் பெற்று, பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுபட்டு குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1815 இல் கண்டியன் ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கை பிரிட்டிஷ் பேரரசுடன் இணைக்கப்பட்டு, அதன் இறையாண்மை பிரிட்டிஷ் மன்னரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டது. 1948 பெப்ரவரி 04 அன்று இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றாலும், அது ஒரு டொமினியன் நாடாகவே காணப்பட்டது.

ஆனால், 1972 இல், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, இலங்கையை முழுமையான குடியரசாகவும் மாற்றியது.

இந்நாள் இலங்கையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. நாட்டின் முழு சுதந்திரத்தையும், தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் கொண்டாடுகின்ற ஒரு முக்கிய நிகழ்வாக இக்குடியரசு தினம் திகழ்கின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720162

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time