இலங்கை சவுதி அரேபிய உறவுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம்.!!!
கலாநிதி M.H.M. Azhar (PhD)
இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகள் – வரலாறு, கலாசார மற்றும் பொருளாதார அடிப்படைகளில் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, 7-ஆம் நூற்றாண்டிலிருந்து முதன்முதலில் உருவானதாகும், கடல் வர்த்தக பாதைகள் மூலம் பாரம்பரியமான உறவுகள் ஏற்பட்டு வந்தன.
வரலாற்றுப் பின்னணி: இலங்கையின் மன்னர்களுள் ஒருவரான மூன்றாம் அக்கிரபோதி மன்னர், நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த ஒரு தூதரை அனுப்பிய வரலாறு குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ தூதரக உறவுகள் 1974-ஆம் ஆண்டு நிறுவப்பட்டன. முதல் சவுதி தூதுவர் 1977-ஆம் ஆண்டு இலங்கைக்கு நியமிக்கப்பட்டார். அதேபோன்று, 1983-ஆம் ஆண்டில் இலங்கையின் தூதரகம் ஜித்தாவில் திறக்கப்பட்டது.
பொருளாதார ஒத்துழைப்பு: சவுதி அரேபியா இலங்கையின் முக்கிய பணியாளர் சந்தையாக உள்ளது, சுமார் 180,000 இலங்கை ஊழியர்கள் சவுதியில், பல்வேறுபட்ட துறைகள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பணப்பரிமாற்றங்கள் இலங்கை பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளன. மேலும், சவுதி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் 1.6 பில்லியன் ரியால் மதிப்பில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பல திட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
சமீபத்திய முன்னேற்றங்கள்: 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சவுதி வெளிநாட்டு அமைச்சர் பைசல் பின் பார்ஹான் இலங்கைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு மற்றும் அரசியல் ஆலோசனைகள் தொடர்பாக:
1. இரட்டைப் வரி தவிர்ப்பு ஒப்பந்தம்
2. அரசியல் ஆலோசனை ஒப்பந்தம்
3. திறன் சரிபார்ப்பு திட்டம்
என மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.
கலாசார மற்றும் கல்வி பரிமாற்றங்கள்: 2024-ஆம் ஆண்டு இரு நாடுகளின் உறவுகளின் 50-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரியாத் நகரிலும் மற்றும் இலங்கையில் மரநடுகை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மேலும், சவுதியில் உள்ள இலங்கையர்களுக்கு இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.
எதிர்காலத் திட்டங்கள்: இரு நாடுகளும் வணிகம், வேளாண்மை மற்றும் சுற்றுலா துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து ஒரு முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் உருவாக்கப்படவுள்ளது என்ன நம்பப்படுகின்றது.
இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகள் வரலாறு என்பதைத் தாண்டி பல துறைகளில் விரிவடைந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த உறவுகள் மென்மேலும் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
✅ உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP
Join Now Group Link :👇🏾👇🏾👇🏾
https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5