உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 13, 2025

Hot News

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான பணிகள் ஓர் அறிமுகம்.!!!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன. எனவே விரைவில் அவற்றுக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் நாம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யப்போகின்ற உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான பணிகள் தொடர்பிலான் சிறிய அறிமுகத்தினை இங்கே பதிவிடுகின்றேன்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களான மாநகரசபைகள்,நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியன 1947ம் ஆண்டு 29ம் இலக்க மாநகர சபை கட்டளைச் சட்டம், 1939ம் ஆண்டு 61ம் இலக்க நகர சபை கட்டளைச் சட்டம்,1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை கட்டளைச் சட்டம் ஆகிய சட்டங்களின் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றன. இச்சட்டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சட்டங்களின் மூலமாக அனுமதியளிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குதல் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான பொறுப்பாகும். குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் எல்லைக்குற்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் வசதிகள், நலனோம்புகை மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்காக சேவைகளை வழங்க வேண்டியது முக்கியமானதாகும்.

உள்ளூராட்சி நிறுவனங்களானவை நிர்வாக மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சேவைகள்,பொது சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் சுத்தத்துக்கான ஏற்பாடுகளை மேம்படுத்துதல்,சூழல்சார் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், பொதுப்பாதைகள் தெருக்களைப்பேனுதல் மற்றும் பொதுப்பயன்பாட்டு சேவைகளைப்பேணுதல் ஆகிய சேவைகளையே பிரதான பணிகளாக மேற்கொள்கின்றன.

இப்பணிகளை மேற்கொள்ள தங்களது எல்லைக்குற்பட்ட பிரதேசங்களில் அரசியலைமப்புக்கும் பாராளுமன்ற நியதிச்சட்டங்களுக்கும் உற்பட்ட வகையில் விதிகள் மற்றும் சட்டங்களை ஆக்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புச்சீர்திருத்தத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளானது மாகாண சபைகளின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதன் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளினை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்புடைய கட்டமைப்புகளையும் தேசிய கொள்கைகளையும் தயாரித்து செயற்படுத்தும் அதிகாரம் தொடர்ந்தும் மத்திய அரசின் கீழாவே காணப்படுகின்றது.

-ஆதம்லெப்பை ஆதிப் அஹமட்-

Related News

Total Websites Views

Total Views: 313386

Search

விளம்பரங்கள்