உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

இலங்கை இராணுவ பெண் சிப்பாயின் முன்மாதிரியான செயலுக்கு குவியும் பாராட்டு.!!!

54 வது காலாட் படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் K.P.M.N. குணசேகர மன்னாரிலுள்ள ஒரு வங்கி வளாகத்திலிருந்து ரூபாய் 102,220.00 பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி மீட்டு, அதனை உரிமையாளரிடம் சென்றடைவதற்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதன் பின்னர், மன்னார் பொலிஸார் பணப்பையை அதன் உரிமையாளரான மன்னாரில் வசிக்கும் சுந்தரராசா மேரி சுதர்ஷனி என்பவரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இச்சிப்பாயின் முன்மாதிரியான செயல், உள்ளூர் பொதுமக்கள் மீது இராணுவம் காட்டும் மனிதாபிமான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை இராணுவத்தின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்கும் வகையிலான இந்த முன்மாதிரி செயலுக்காக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கோப்ரலுக்கு பாராட்டுக் கடிதமொன்றை வழங்கியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722353

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time