உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஜனாஸா சேவைகளை வலுப்படுத்த: காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு – பிரதேச செயலகத்தினால் காணி வழங்கி வைப்பு.!!!

காத்தான்குடி பகுதியில் ஜனாஸா சேவைகள் உள்ளிட்ட மனிதநேய மற்றும் சமூக நலப் பணிகளை நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு, அவர்களது காரியலயம் மற்றும் வாகன தரிப்பிடம் அமைப்பதற்காக புதிய காத்தான்குடி பரிட் நகர் பகுதியில், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, ஜனாஸா சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தவும், அவற்றை நிரந்தரமாகவும் சீரான முறையிலும் முன்னெடுக்கவும் இக்காணி வழங்கல் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த காணி வழங்கல், சமூக சேவை அமைப்புகளுக்கான அரசுத் துறைகளின் ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுவதுடன், மனிதநேய பணிகளுக்கு அரசின் ஒத்துழைப்பு எவ்வளவு அவசியமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

இந்த மனிதநேய நடவடிக்கையை முன்னெடுத்த காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு, காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு சார்பில் மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

அரசுத் துறை மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்படும் போது, சமூக தேவைகள் நிலையான தீர்வுகளுடன் நிறைவேற்ற முடியும் என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டாக இந்த காணி வழங்கல் நிகழ்வு அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810832

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time