பொலன்னறுவை வைத்தியசாலையில் திடீர் வெடிப்பு; 7 பேர் காயம்.!!!
• சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் கட்டிடத்திற்கும் சேதம்.
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இடம்பெற்ற திடீர் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


