உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

புனித நோன்பை முன்னிட்டு உணவகங்கள் திடீர் பரிசோதனை – சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!!!

(பாறுக் ஷிஹான்)

புனித நோன்பை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் இன்றைய தினம் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றலுடனும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் போது உணவகங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு அவை உடனடியாகத் திருத்தப்பட்டன.

மேலும், வாழைப்பழக் குலைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு களஞ்சிய அறை மிக மோசமான சுகாதார நிலையிலிருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அங்கிருந்த வாழைக்குலைகள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புனித நோன்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான திடீர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700907

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time