உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 12, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

திடீர் மினி சூறாவளி: 7 வீடுகள் சேதம்; 10 பேர் பாதுகாப்பாக மீட்பு.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

புத்தளம் மாவட்டத்தின் கீரியன்கள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஏற்பட்ட திடீர் சீரற்ற வானிலை மற்றும் மினி சூறாவளி காரணமாக ஏழு வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் திடீர் அனர்த்தத்தினால் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கீரியன்கள்ளி பகுதியில் பாரிய மரமொன்று வேரோடு சரிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.

இதனையடுத்து, முந்தல் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு, வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன் மூலம் போக்குவரத்து மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, கீரியன்கள்ளி, தஸநாயக்கபுர கிராமத்தில் பலத்த காற்றினால் வீடுகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் கழன்று பறந்ததுடன், பாரிய மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தமையாலும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதன்படி, இரண்டு வீடுகள் முற்றாகவும் மேலும் ஐந்து வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. எனினும், வீடுகள் சேதமடைந்தமையால் பாதிக்கப்பட்ட 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாகப் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இந்த அனர்த்தம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1224586

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time