காட்டு யானையின் திடீர் தாக்குதல்; புத்தல–கதிர்காமம் வீதியில் பேருந்து விபத்து; பலர் படுகாயம்.!!!
புத்தல – கதிர்காமம் பிரதான வீதியில், யால வனப்பகுதியை அண்மித்த பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது காட்டு யானை ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியதில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
யானையின் எதிர்பாராத தாக்குதலால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பல யாத்திரிகர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யால வனப்பகுதியை அண்மித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் காட்டு யானைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



