ரகசிய தகவலில் சிக்கிய சந்தேகநபர்; 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு.!!!
-தில்சாத் பர்வீஸ்-
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 07 பகுதியில், 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது சந்தேகநபரிடமிருந்து 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.