உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இன்டர்போல் சிவப்பு அறிவித்தலின் கீழ் தேடப்பட்ட சந்தேக நபர் வாத்துவில் கைது.!!!

• இந்தியா மற்றும் இலங்கை தடுப்புக் காவலிலிருந்து தப்பியவர் எனத் தகவல்.

இன்டர்போல் சிவப்பு அறிவித்தலின் கீழ் தேடப்பட்டு வந்த 54 வயதான சந்தேக நபர் ஒருவர் வாத்துவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் தடுப்புக் காவலில் இருந்த நிலையில் தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபர், 337 கிலோகிராம் ஹெரோயினை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு கடத்த முயன்ற சந்தர்ப்பத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கொச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், அங்கிருந்து தப்பிச் சென்று கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வென்னப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து குறித்த சந்தேக நபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீண்டும் தப்பிச் சென்ற சந்தேக நபர், நேற்றைய தினம் வாத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214593

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time