மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பரபரப்பு: கல்லடி பாலத்தில் விழுந்த 20 வயது யுவதி – சடலமாக மீட்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், இச்சம்பவம் இன்றிரவு (23) 8 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளங்கோ விதுசாயினி எனும் யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த யுவதியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





