உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

July 8, 2026

Hot News

IMG-20260705-WA0042
போர், பாதுகாப்பு, மத மரபு: கமேனியின் இறுதிச்சடங்கு தாமதம் சொல்லும் செய்தி.!!!
IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!

Share :

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய பேருந்துகள் சிக்கின; மூவருக்கு மொத்தம் ரூ.3.60 இலட்சம் அபராதம்.!!!

-பாறுக் ஷிஹான்-

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (06) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய மூவருக்கும் தலா 120,000 ரூபா வீதம், மொத்தம் 3,60,000 (மூன்று இலட்சத்து அறுபதாயிரம்) ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (CI) விஜேரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகன சோதனையின் போதே இந்த பேருந்து வண்டிகள்  முற்றுகையிடப்பட்டது.

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில்  இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.

மேலும் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 957353

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time