காத்தான்குடியில் முச்சக்கரவண்டி–மோட்டார் சைக்கிள் மோதலில்: 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் – முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கைது.!!!
(ஜே.கே)
முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்து சம்பவத்தில் 19 வயது இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் பைசல் வீதியில் இருந்து கடற்கரை வீதிக்கு வந்த முச்சக்கர வண்டி கடற்கரை வீதியினால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலை உடைந்து படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த இளைஞன் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இச்சம்பவத்தின் போது முச்சக்கரவண்டி செலுத்தி வந்த காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத் தலைவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி பலத்தை சேதமடைந்துள்ளன. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


